பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் கைது!

0
768

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் அருண பிரியசாந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 9ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 16 சந்தேக நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, நேற்று கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரதிது சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 25ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் சட்டவிரோத ஒன்றுக் கூடலை ஏற்பாடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் நேற்று காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.