இலங்கையை உலுக்கிய ஆயிஷா சிறுமி மரணம்; சிக்கிய சந்தேக நபர்கள்

0
614

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கீரை தோட்டத்தை அண்மித்த காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.