இலங்கைக்கு தொடர்பில் உலக வங்கியின் புதிய அறிவிப்பு!

0
272

தேவையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை வகுக்கும் வரை நிதி நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு புதிய நிதியுதவிகளை வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

எனினும் சில அத்தியாவசிய மருந்துகள், வறுமையால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான தற்காலிக பணப்பரிமாற்றங்கள் மற்றும் பிற உதவிகளுக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிதிகளின் ஊடாக உதவி வருவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு புதிய அவசரக் கடன் அல்லது வேறு கடன் உறுதிப்பாடுகளை வழங்குவதற்கு உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் வங்கி கூறியுள்ளது.

உலக வங்கி, இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் செயற்பட்டு வருகிறது.

எனினும் இலங்கையில் அவசியமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை, அந்த நாட்டுக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமிடவில்லை என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.