கோட்டா – ரணில் அரசாங்கத்திற்கு பிள்ளையானின் முடிவு!

0
383

பிரதமருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடே உள்ளது – சிவனேசத்துறை சந்திரகாந்தன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் அரசாங்கத்துடனேயே இணைந்திருப்பதாக அவர் எமது சேவைக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமைச்சு பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.