எரிபொருள் பற்றாக்குறை: இந்திய வங்கிகளிடம் கடனுதவி!

0
99
An empty fuel station in Ashford, Kent. Picture date: Monday April 11, 2022. Photo credit should read: Gareth Fuller/PA Wire

இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய வங்கிகளின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகிய கால கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக இந்திய அரச வங்கியொன்றிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.