ஊடகவியலாளர் தர்சனவை விசாரணைக்கு அழைத்துள்ள பொலிஸார்

0
90

ஊடகவியலாளர் தர்சன ஹந்துன்கொடவை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாளை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சீ.ஐ.டி) யில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைக்கு நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான காணொளிக் கருத்து வெளியிட்டமை தொடர்பாகவே தர்சன ஹந்துன்கொட விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கருத்து வெளியீட்டுக்காக அவரை விசாரணைக்கு அழைப்பது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயற்பாடாகும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.