நடிகை உயிருக்கு ஆபத்து என வதந்தி பரப்பிய இயக்குநர் கைது

0
256

நடிகை உயிருக்கு ஆபத்து உள்ளதாக வலைத்தளத்தில் பதிவிட்ட இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பதிவிட்ட மலையாள இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலையாள இயக்குனர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சணல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் அளித்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை தொடர்ந்து அவமானப் படுத்துவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள எர்ணாகுளம் போலீசார் இயக்குனர் சணல் குமாரை கைது செய்துள்ளனர்.