உக்ரைன் சொல்வதற்குப் பதில் ஈராக் என வாய் தவறி உளறிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி!

0
584

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (George Bush) உக்ரைன் என்று சொல்வதற்குப் பதில் ஈராக் மீதான படையெடுப்பு ‘கொடூரமானது என்றும் ‘நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.

தவறை உணர்ந்ததும் தாம் சொல்லவந்தது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு என்று திருத்திக்கொண்டார். அமெரிக்காவின் டலாஸ் நகரில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் ரஷ்யாவின் அரசியல் அமைப்பைக் குறைகூறிக்கொண்டிருந்தார். ‘ஈராக் மீதான கொடூரமான நியாயமற்ற படையெடுப்பு ஓர் ஆடவரின் முடிவு என்று கூறிய புஷ் (George Bush) தலையை ஆட்டி ‘நான் சொல்லவந்தது உக்ரைன் எனச் சொல்லித் திருத்திக்கொண்டார்.

அந்தத் தவறுக்குத் தமது வயதே காரணம் என நகைச்சுவையாகச் கூறினார் புஷ்(George Bush). 2003ஆம் ஆண்டு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்தது.

அங்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. ஆனால் அங்கு அத்தகைய ஆயுதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஈராக்கியப் போரில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் புலம்பெயர நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.