இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு!

0
613
People walk past the main entrance of the Sri Lanka's Central Bank in Colombo, Sri Lanka March 24, 2017. REUTERS/Dinuka Liyanawatte/File Photo

இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான தீர்மானம் இன்று மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி, முதல் தடவையாக கூடியது.

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் முறையே 700 அடிப்படை புள்ளிகளாக 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் கொள்கை வட்டி விகிதங்களில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.