14,401 முப்படையினருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி!

0
228

இன்று அமுலுக்கு வரும் வகையில், 14,401 முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட இதர தரவரிசைகளுக்கு பதவியுயர்வு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிகாரம் வழங்கியுள்ளார்.

13ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கைமய, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா 396 அதிகாரிகளுக்கும் 8,110 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 74 கடற்படை அதிகாரிகள், 2010 கடற்படை வீரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் , விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன 450 அதிகாரிகள் மற்றும் 3,361 இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.