புடினுக்கு அதிரடி தடை விதித்த கனடா!

0
589

ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின்(Vladimir Putin) மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ(Marco Mendicino) கூறியதாவது;

உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin), அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், “புடின்(Vladimir Putin) ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷ்யாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்” என்று மார்கோ மென்டிசினோ (Marco Mendicino)தெரிவித்தார்.