“ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம் மரியாதை உண்டு” – சஜித் பிரேமதாச

0
206

கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உள்ள 225 பேரும் வெட்கமற்றவர்கள் என 22 மில்லியன் மக்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கைகளுக்கு துரோகம் செய்யாமல் சரியான நிலையில் இருந்து சுயமரியாதையை பேணுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆசனங்கள் தனக்கு பெரிதல்ல என தெரிவித்த சஜித், ஜனநாயக ரீதியில் வீட்டுக்குப் போ என கூறினால் நாங்கள் வீட்டுக்குப் போகத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.