“அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை”- ஐக்கிய மக்கள் சக்தி

0
241

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதன்படி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் முற்போக்கான தீர்மானங்களுக்கு தாம் ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவும் அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளது.

தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்து அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை ரத்து செய்வார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.