இலங்கையில் எட்டாத உயரத்தை தொட்ட தங்கத்தின் விலை!

0
499

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று, ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கமைய, இலங்கையின் நேற்றைய தினம் தங்க நிலவரம் வருமாறு,

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,230 ரூபாயாக பதிவாகியுள்ளது.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850 பதிவாகியுள்ளது.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,300 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 170,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,330 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 162,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.