நாளை 244 கைதிகளுக்கு விடியல்!!

0
228

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இவ்வாறு 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.