செவ்வாய் கிரகத்தில் பூகம்பம்!

0
730

செவ்வாய் கிரகத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்காவின் நாசா அமைப்பு கண்டறிந்துள்ளது. வேறொரு கிரகத்தில் இத்தனை தாக்கம் உள்ள பூகம்பத்தை பூமியில் பதிவு செய்வது இதுவே முதல் முறை.

கடந்த மே 4 அன்று, “magnitude 5 temblor” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அதிபயங்கர நிலநடுக்கம், நாசா அமைப்பின் இன்ஸைட் செவ்வாய் கிரக ஆய்வு வாகனத்தின் 1222வது நாளின் போது ஏற்பட்டுள்ளதாக நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே அளவிலான நிலநடுக்கம் பூமியில் ஏற்பட்டிருந்தால் சாதாரண ஒன்றாக கருதப்பட்டிருக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தில் இது என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் எனவும் நாசா கூறியுள்ளது.

இனி இந்த நிலநடுக்கத்தை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியில் இருப்பவை பற்றிய பதில்களை வழங்கும் எனவும் இந்த ஆய்வாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நாசா அமைப்பின் இன்ஸைட் ஆய்வு வாகனம் இதுவரை சுமார் 1300 நிலநடுக்கங்களுக்கும் மேல் கண்டறிந்துள்ளது.

எனினும், தற்போதைய அதிபயங்கர நிலநடுக்கம் இனி செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்தை மாற்றக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய பூகம்பத்தின் தாக்கம் குறித்த தகவல்களைப் பயன்படுத்தி, இன்னும் பல ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகம் பற்றிய புதிய செய்திகளை நாம் தெரிந்து கொள்ளலாம் என நாசா இன்ஸைட் ஆய்வுகளின் முதன்மை ஆய்வாளர் ப்ரூஸ் பேனர்ட் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அதிபயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு, இன்ஸைட் ஆய்வு வாகனத்தில் சோலார் பேனல்களில் கடுமையாக தூசி படிந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்ஸைட் வாகனத்தின் ஆற்றல் உருவாக்கும் திறன் மிகக் குறைவு என்பதால், இந்தப் பணிகள் மேலும் தொடர்வதற்கு சிரமம் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக, வாகனத்தின் சோலார் பேனல்களில் தூசி ஏற்பட்டால், செவ்வாய் கிரகத்தில் புழுதியை அகற்றும் காற்று அதனை சரிசெய்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா அமைப்பின் டிஸ்கவரி திட்டங்களுள் ஒன்றான இன்ஸைட் லேண்டர், உலகத்திற்கு வெளியில் நிலத்தில் அமைந்துள்ள ஒரே நிலையம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம், நாசா அமைப்பு இன்ஸைட் திட்டத்தை மேலும் 7 கிரகங்களுக்கும் கொண்டு செல்லவிருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Gallery