துப்பாக்கிச் சூட்டுடன் தாமாக வைத்தியாலைக்கு சென்ற நபர்

0
644

றொரன்டோவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் தாமகவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

றொரன்டோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தின் பொரஸ்ட் ட்ரைவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைந்துள்ள கூடைப்பந்தாட்ட மைதானமொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது எந்தவொரு நபரும் காயமடைந்த நிலையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் தாமகவே வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.