நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த மஹிந்த புதல்வர்!

0
629

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் எயார்லைன்ஸூக்கு சநெ்தமான SQ 469 விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அத்துடன் ராஜபக்சர்கள் நாட்டின் வளங்களை சுரண்டி வேறுநாடுகளில் சொத்து சேகரித்துள்ள தகவல்கள் அம்பலமானதை அடுத்து  மக்கள் ராஜபக்ச குடும் உறுப்பினர்கள் மீது கடும் கோபம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.