இலங்கையின் பல துறைகள் 24 மணிநேரம் முடக்கம்

0
227

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக இவ்வாறு திடீரென ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்றைய தினம் ஸ்தம்பித்துள்ளன. 

குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.