இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை!

0
103

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் போது ஏனைய தரப்புகளுடன் கலந்தாலோசிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிகையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருதலைப்பட்சமாக நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் முயற்சிப்பதாகவும், அவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.