நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய கோட்டாபய தரப்பு!

0
47

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  அரசு ஆதரவு வாக்குகளால் பிரதிசபாநாயகர் பதவியை   ரஞ்சித் சியம்பலபிட்டிய கைப்பற்றியுள்ள நிலையில் , எதிரணியான  சஜித் தரப்புக்கு இது பெரும் பின்னடைவை ஏற்பட்டுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம் பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெற்ற வாக்குகள்,

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65

நிராகரிக்கப்பட்டவை- 03

வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8