வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுகள் நிவாரணம்!

0
126

 நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதன்படி யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, உடுவில், தெல்லிப்பளை, கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு சட்டம் மற்றும் மனித உரிமைகள் நிலையத்தினால் உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.