“லிபியாவின் நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டுவிடக் கூடாது”

0
550

 கோபமான போராட்டங்கள் நாட்டை அராஜகத்திற்கு இட்டுச் செல்லும். அப்படி ஒரு நிலையை அனுமதித்தால் லிபியாவுக்கு நேர்ந்த கதியே நம் நாட்டுக்கும் ஏற்படும்.

இதனை அனுமதிக்கக் கூடாது என்று சிந்திக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மே தின நிகழ்வு பத்தரமுல்ல அபேகமவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தவறான முடிவுகளும் காரணமாகும். அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கும் போது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து எதிர்ப்போம். எங்கள் உரையாடல் தொடரவில்லை

. கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்த நாங்கள் தவறான முடிவுகளை எடுக்க ஆரம்பித்து மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தின் தவறுகளை பேச ஆரம்பித்தோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.