பண்டாரநாயக்கவின் சிலைக்கு கறுப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டம்!

0
129

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் இருபது நாட்களைக் கடந்துள்ளது.

காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு கறுப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் எழுந்திருங்கள் என்ற பதாகையையும் அவர்கள் வைத்திருந்தனர்.