நான் இல்லாத அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!

0
739

“தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க முடியாது” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்த அவர் , “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் பிரதமர் மஹிந்த இதன்போது தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.