தோண்டத் தோண்ட பிணங்கள்… கண்ணீரில் உக்ரேனிய கிராமம்

0
741

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பல கிராமங்களில் ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர் தோண்டத் தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது கீவ் நகரின் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பிணங்கள் தோண்டி எடுக்கப்படும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை 900 அப்பாவி மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அடையாளம் காணும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பலரது சடலங்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்ய துருப்புகள் உக்ரேனிய மக்களை கொன்று புதைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறும் அப்பகுதி அதிகாரிகள், பெரும்பாலானோர் சித்திரவதைக்கு இரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

போருக்கு மத்தியில் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட மக்கள், தங்கள் உறவினர்களின் சடலங்களுக்காக தேடி ஓய்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.