அரச தலைவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்து!

0
174

மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு சவால்களை வெற்றி கொள்ளும் சுபீட்ச்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரலாற்றில் மிக பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொண்டு வருகிறோம், மலர்ந்துள்ள புதிய ஆண்டில் ஒற்றுமையுடன் நாம் அனைத்தையும் வெற்றி கொள்வோம்.

சவால்களுக்கு முகம்கொடுக்கும் போது நீங்கள் அநேக சிரமங்களை எதிர்கொள்கின்றீர்கள் என்பதை அறிவோம், சவால்களை முறியடித்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பவதற்க்கான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.