பிரதமரின் அழைப்பிற்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்

0
197

பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும் எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்க்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம்.

எங்களுடைய பிரதான நோக்கம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட இந்த ஊழல் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதுதான். ஆகவே அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடக்குமானால் அதற்கு முன்னர் எங்களுடைய பிரதான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்.

அப்படி இல்லையென்றால் அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எம்முடைய நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்பது தான் எமது கருத்து என குறிப்பிட்டுள்ளனர்.