டபுள் ஹாட்ரிக் கோல்கள்.. மெஸ்ஸியின் தாறுமாறு ஆட்டம்! கதறும் ரொனால்டோ ரசிகர்கள்

0
187

அர்ஜென்டினாவின் ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி 100 நாட்களுக்குள் 9 அசிஸ்ட்ஸ் செய்து மிரள வைத்துள்ளார்.

லயோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிக்காக விளையாடி வருகிறார். இதே அணியில் பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மாரும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த கிலெர்மோன்ட் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நெய்மார் மூன்று கோல்களும், பெப்பே மூன்று கோல்களும் அடித்தனர்.

மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காவிடிலும் துரிதமாக செயல்பட்டு நெய்மார், பெப்பே ஆகிய இருவருக்கும் கோல் அடிக்க உதவினார். இதன் மூலம் 100 நாட்களுக்குள் 9 கோல்கள் அடிக்க அவர் உதவியாக இருந்துள்ளார்.

மெஸ்ஸியின் சக போட்டியாளராக கருதப்படும் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ 8 அசிஸ்ட்ஸ் செய்ய 730 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், மெஸ்ஸி சாதனை புரிந்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரொனால்டோவின் ரசிகர்களோ வருத்தத்தில் உள்ளனர்.