பிரபல நடிகை ரோஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

0
156

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்த 2½ ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இந்நிலையில் நாளை காலை 11.31 மணிக்கு வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

இந்த நிலையில் நகரி தொகுதி எம்.எ.ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு என்ன இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்று இன்று மாலை தெரியவரும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.