மக்கள் கூட்டத்தால் நிரம்பிய காலி முகத்திடல்; அடிபணிவாரா கோட்டா?

0
98

கொழும்பு காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்கத்தை எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதாகவும், இது பாரிய மக்கள் போராட்டமாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசாங்கத்தை பதிவி விலகுமாறுகோரி  மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில்,  அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எனினும்    ஜனாதிபதி கோட்டாபய மட்டும் பதவி விலகாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery