தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை!

0
148

தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில்வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து திரும்பி வந்த குறித்த நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த  நபர் நள்ளிரவு 1 மணி அளவில் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த போதே நான்கு பேர் கொண்ட குழுவால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.