எடுத்த முடிவில் மாற்றம் இல்லை அடித்து கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

0
393

அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை  நேற்றைய தினம் அரச தலைவர் செயலகத்தில் சந்தித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கான காரணங்கள் குறித்து அரச தலைவர் கேட்டறிந்தார்.

தற்போதைய நிலவரத்தையும் அரசாங்கத்தின் வகிபாகத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது எனவும், நாடாளுமன்றத்தில் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.