நாளைய தினம் மின்வெட்டுத் தொடர்பாக வெளியான அறிவித்தல்!

0
247

இலங்கையில் 30) சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களில் நாளை காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரையான காலப்பகுதியில் 06 மணித்தியாலங்களும், பிற்பகல் 02 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான 04 மணித்தியாலங்களும், இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் 02 மணிநேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களில் நாளை காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரையான காலப்பகுதியல் 06 மணித்தியாலங்களும், பிற்பகல் 02 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 04 மணித்தியாலங்களும், இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் 02 மணிநேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று, M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.