லண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி

0
400
woman killed gas explosion London Harrow

வடமேற்கு லண்டன் ஹாரோவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. woman killed gas explosion London Harrow

புல்பேக் வே, ஹாரோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதனால் குறித்த கட்டடத்தின் முதலாவது தளம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அதிலிருந்த சுமார் 40 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் அவர்களின் குழந்தையும் காயமடைந்ததாகவும், அதில் குழந்தையும் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், எரிவாயு வெடிப்பினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

tags ;- woman killed gas explosion London Harrow

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************