ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா

0
318
US Ambassador UN Nicky Hall resigns

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். US Ambassador UN Nicky Hall resigns

அமரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது கவர்னராகவும் பதவி வகித்து வந்த நிக்கி ஹாலே, ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை இன்று இராஜினாமா செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இராஜினாமாவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக முழுமையான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேவின் இராஜினாமாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தூதரக சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளரும், இஸ்ரேலின் மீது ஐ.நா.வின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்தும் வரும் ஹேலி, கடந்த வாரம் தனது இராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தை தனியார் ஜெட் சேவைகளுக்கு ஹேலி பயன்படுத்துவதாக சர்ச்சை நிலவுவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது இராஜினாமாவுக்கு இதுதான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

tags :- US Ambassador UN Nicky Hall resigns

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்