மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி

0
454
Oommen Chandy accusation Kerala government plan disrupt

சபரிமலையில் பெண்களை அனுமதித்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி குற்றஞ்சாட்டியுள்ளார். (Oommen Chandy accusation Kerala government plan disrupt)

கேரள முன்னாள் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி பத்தனம் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கேரளா மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாகும். இங்கு அனைத்து தரப்பு மக்களும் விழாக்களை இணைந்து கொண்டாடி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சென்று வருகிறார்கள். இது கேரளாவில் மாத்திரமே பார்க்க முடியும்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மத பிரச்சினைகளை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாள நினைக்கின்றது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் அங்கு காலம், காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கும் வழக்கத்தையே இனியும் பின்பற்றலாம்.

கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கம்யூனிஸ்ட் அரசு சபரிமலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

தேவசம்போர்டு தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் போல மாறிவிட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Oommen Chandy accusation Kerala government plan disrupt