போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலப்பு தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

0
407
central govt orders problem regarding contaminated

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (central govt orders problem regarding contaminated)

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பான நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூடுமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; central govt orders problem regarding contaminated