பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்

0
390
Farmers cannot even come Delhi air grievances

அனைத்துலக வன்முறையற்ற நாளில் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். (Farmers cannot even come Delhi air grievances)

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு, பெற்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் வந்த போது, எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து பொலிஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டை வீசியதாலும் டெல்லி உத்தரப் பிரதேச எல்லை போர்க்களமானது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘அனைத்துலக வன்முறையற்ற நாளில், டெல்லிக்கு அமைதியான முறையில் வந்த விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்கி பாரதிய ஜனதா காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்றது.

இப்போது தங்களுடைய குறையை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்கு வரமுடியாது’ என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை பிறப்பித்த பொலிஸ், விவசாயிகளை அனுமதிக்கவில்லை.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Farmers cannot even come Delhi air grievances