ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை!

0
485
ig palace owned ranveer shah gold gemini testing india tamil news

தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் அரண்மனை பங்களாவில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.ig palace owned ranveer shah gold gemini testing india tamil news

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையல் ஐம்பொன் சிலைகள் உட்பட 90க்கும் மேற்பட்ட பழமையான கற்சிலைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனை பங்களாவில் சிலைகள் பதுக்கி இருப்பதாக வெளியான தகவலையடுத்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனைக்கு பின் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :