போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா!

0
457
h.raja came temple police protection india tamil news

முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்த பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு இடையே கோயிலில் தீர்த்தமாடிச் சென்றார்.h.raja came temple police protection india tamil news

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சித்து பேசினார்.

இதற்கு மறுநாள் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் விமர்சித்து பேசினார்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இரு தினங்களுக்கு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஹெச்.ராஜா இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். மகாளய பிதுர் பக்‌ஷம் எனப்படும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் காலம் நேற்று துவங்கியது.

இதனைத் தொடர்ந்து ராஜா தனது முன்னோர்கள் நினைவாகத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார்.

அக்னிதீர்த்தக் கடலில் நீராடிய அவர், பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் கோயிலுக்கு சென்று 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.

அறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்து பேசிய நிலையில், கோயிலுக்கு வந்த ராஜாவுக்கு எதிராக பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக 2 ஆய்வாளர்கள், 2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான போலீஸார் ராஜாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளர் சுந்தரவாத்தியார் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற ராஜா, தனது முன்னோர்களுக்குத் திதி கொடுத்த சிறப்பு பூஜைகள் செய்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :