10 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவனை பாதியில் காப்பாற்றிய இளைஞர்

0
565
young man saved boy fallen 10th floor

கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில், 12 மாடிகள் கொண்ட குடியிருப்புப் பகுதி உள்ளது. அந்தக் கட்டடத்தின் 10 வது மாடியில் 7 வயது சிறுவன் ஒருவன் திடீரென ஜன்னல் வழியாகத் தொங்கி கொண்டிருந்துள்ளான். அச்சிறுவன் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்தும் முடியவில்லை, இதனால் கீழே இருந்த குடும்பத்தார் மற்றும் அருகில் வசிப்பவர்கள் கூச்சலிட்டபடி சிறுவனை தாங்கி பிடிப்பதற்காக பாய் ஒன்றைப் பிடித்து தயார் நிலையில் இருந்தனர்.மீண்டும் வீட்டுக்குள் செல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, சிறுவன்10 வது மாடியில் இருந்து கீழே விழத் தொடங்கினான். young man saved boy fallen 10th floor

இதனை கீழே இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். அப்போது 9 வது மாடியில் இருந்த ஒருவர், அந்தச் சிறுவனை ஜன்னல் வழியாக அலேக்காகப் பிடித்து உள்ளே இழுத்துக் காப்பாற்றிவிடுகிறார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் எதிர் கட்டடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவானது.

அர்டியோம் காரேவ் என்ற நபரின் இந்தச் செயலைப் பாராட்டி, நகராட்சி நிர்வாகம் அவருக்கு 1,400 டாலர் பரிசுத்தொகை அறிவித்தது. ஆனால், அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். சினிமாவில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற காட்சிகள் தற்போது நிஜத்தில் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபரை பலரும் பாராட்டியுள்ளனர்.

tags :- young man saved boy fallen 10th floor

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்