இறுதி யுத்தத்தை நடத்தியது நானே! முதற்தடவையாக உண்மையை ஒப்புக்கொண்ட மைத்திரி!

0
524

“இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில்,உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். எனவே நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டுவாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். LTTE Last War Maiththri Statement Sri Lanka Tamil News

நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை முதற்தடவையாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

போரின் முக்கிய கட்டத்தில் இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று யாருக்கும் தெரியாது, எனக்கு மாத்திரம் தான் அது தெரியும்.

அவ்வேளையில் விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவா கினர்.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பிரதி பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன்.

எனவே நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டுவாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்.என்னுடைய தலைமையின் கீழ் நடந்த அந்த இறுதிப்போரில் படையினர் எந்த பொற்குன்றங்களையும் செய்யவில்லை.அவர்கள் போர் விதிமுறைகளை மீறாமல் அந்த போரை நடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார்கள் என கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites