பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்

0
522
petrol price hiked today also one litter crossed rs86

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன சாரதிகள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். (petrol price hiked today also one litter crossed rs86)

பெற்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பெற்ரோல், டீசல் விலையில் உயர்வு காணப்பட்டு வருகின்றது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, மசகு எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெற்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்படுகின்றது.

பெற்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெற்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் பெற்ரோல் விலை இன்று வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாயை தாண்டியுள்ளது.

பெட்ரோல் விலையில் 14 காசுகள் உயர்ந்து லீட்டர் ரூ.86.13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை லீட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து, ரூ.78.36 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; petrol price hiked today also one litter crossed rs86