தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

0
389

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆனல்ட், அதி­கா­ரி­களை இலக்கு வைத்து வழக்­குத் தாக்­கல் செய்­வ­தன் ஊடாக பொலி­ஸார் சதி­யில் ஈடு­பட முயற்­சிக்­கின்­ற­னரா என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். Jaffna Mayor Arnold Latest Statement Sri Lanka Tamil News

தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில், யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் அதனை தடுக்­கும் நோக்­கு­டன் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆணை­யா­ளரை நீதி­மன்­றில் நாளை முன்­னி­லை­யா­கு­மா­றும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆர்னோல்ட் நேற்று மாலை அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரிகை அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மாந­கர சபை­யின் முதன்மை நிறை­வேற்­றுப் பிர­தி­நிதி என்ற அடிப்­ப­டை­யில் இந்த வழக்­கா­னது மாந­கர முதல்­வ­ரின் பெயர் குறிப்­பிட்டே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்­டும்.

அரச உயர் அதி­காரி மீது வழக்­குத் தொடுக்­கப்­பட்­டி­ருப்­பது அரச நிர்­வாக இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்தி எமது மக்­க­ளின் வேண­வாக்­களை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் சதி முயற்­சி­யா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

நாம் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்க வந்­த­வர்­கள். மக்­க­ளோடு தொடர்­புள்ள நிகழ்­வுக்கு, யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், நிறை­வேற்று அதி­கா­ரப் பிர­தி­நி­தி­யாக, யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வ­ராக நானும் இருக்­கின்­ற­பொ­ழுது இந்த விட­யங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றும்­படி அரச அதி­கா­ரி­க­ளைப் பணிப்­பது சட்­ட­பூர்­வ­மா­னதா என்று எண்­ணத் தோன்­று­கின்­றது.

நினை­வு­நாள் ஏற்­பா­டு­களை மக்­க­ளின் விருப்­பின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேற்­கொள்­ளும். நீதி­மன்ற நடை­மு­றை­களை மதித்து இந்த விட­யங்­களை மாந­கர சபை சட்­ட­ரீ­தி­யா­கக் கையா­ளும்.

எமது மக்­க­ளின் விடு­தலை வேண்­டிய உணர்­வு­களை சட்­டத்­தைக் கொண்டு அல்­லது அதி­கா­ரத்­தைக் கொண்டு மழுங்­க­டிக்க முடி­யாது. தியாகி திலீ­ப­னின் நினைவு தினம் எவ்­வித மாற்­றங்­க­ளும் இன்றி நாம் எண்­ணி­யி­ருந்த அமைப்­பிலே இடம்­பெ­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

Tamil News Live

Tamil News Group websites