இங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது !

0
347
Award Best Music Album UK 2018

2018ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் Mercury Prize என்ற விருதை அதிரடிக் கலக்கல் Wolf Alice இசைக்குழு வென்றுள்ளது. Award Best Music Album UK 2018

இங்கிலாந்தின் சிறந்த பாடல் தொகுப்பிற்கு வருடாந்தம் வழங்கப்படும் மேர்சி ப்ரைஸ் விருதை ‘Visions of a Life’ என்ற இசைத் தொகுப்பிற்காக Wolf Alice இசைக்குழு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வென்றுள்ளது.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட லண்டன் நகரில் வட பகுதியைச் சேர்ந்த குறித்த விருது பெற்ற இசைக்குழுவானது 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இவ்விருதைப் பெற்ற வொல்ஃப் ஏலிஸ் இசைக்குழு 25,000 பவுட்ன்ஸ் பணத்தை வெகுமதியாகப் பெற்றுள்ளது.

குறித்த விருதுக்கு காரணமான இசைத் தொகுப்பு ‘Visions of a Life’, கடந்த வருடம் வெளியிடப்பட்டுள்ளதுடன் அப்போதைய வெளியிடப்பட்ட இசைத் தொகுப்புக்களின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் இருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

tags :- Award Best Music Album UK 2018

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************