இன்று தியாகி திலீபனின் நினைவு தினம்!

0
520
Memorial Day today Tyagi Thileepan

அமைதிப் படையாகக் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி, சூறையாடி, அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில்  12 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தாயக மண்ணிலும், புலம் பெயர் தேசத்திலும் இன்று ஆரம்பமாகின்றது. Memorial Day today Tyagi Thileepan

மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உணவு ஒறுப்புப் போராட்டத்தை இதேபோன்றதொரு நாளில் 31ஆண்டுகளுக்கு முன்னதாக 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தான்.

ஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அகிம்சைத் தீயை நல்லூரில் திலீபன் பற்ற வைத்தான்.

12 நாள்கள் நீராகாரமும் இன்றி உணவு ஒறுப்பை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்.
அகிம்சையைப் போதித்த காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப் போனது.

திலீபனின் சாவை வேடிக்கை பார்த்தது இந்தியா. இதுவே பின்னாளில் விடுதலைப் புலிகள் இந்தியாவை ஈழமண்ணிலிருந்து அடித்து,விரட்டி, துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பிரதேசங்களில் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த காலங்களில் நினைவுகூரப்பட்டது.

சிவப்பு – மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

தாயக தேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், பகிரங்கமாக பொதுவெளியில் நினைவுநாள் நினைவுகூரப்படவில்லை. புலம் பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு, நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் 10ஆண்டுகளின் பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் முதன் முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டும் பொது வெளியில் நினைவு கூரல் இடம்பெற்றது. இந்த ஆண்டும் மாபெரும் நினைவு கூரல் நடைபெறும்.

tags :- Memorial Day today Tyagi Thileepan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites