நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

0
280
Shankars 20 postponed next year tamil news

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”2.0” படத்தை, அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. Shankars 20 postponed next year tamil news

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”2.0” படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ரிலீஸான ”எந்திரன்” படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருட இறுதியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்கு பின்னர் ”காலா” ரிலீஸாகி, ரஜினி தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் பாதியை முடித்துவிட்டார்.

இந்நிலையில் ”2.0” படம் வரும் நவம்பர் 29 ஆம் திகதி வெளியாகும் என ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இச் சூழ்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் ஒர்க்கை கவனித்து வந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் முக்கிய பகுதிகள் அந்த நிறுவனங்களில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

மேலும், இவற்றை வெளியே கொண்டுவர பெரிய தொகையை செலவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் திகதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகும் என தகவல் வெளியாகியுள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :- Shankars 20 postponed next year tamil news