செய்தியாளர் நடராஜா குகராஜாவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணை

0
383
nadaraja kuharaja present crime investigation department Lankan latest news

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலக செய்தியாளர் நடராஜா குகராஜாவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். nadaraja kuharaja present crime investigation department Lankan latest news

இவரை எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் சிரேஷ்ட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் கடந்த ஜூன் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, இந்த வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிவரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் தனியார் தொலைக்காட்சியின் அலுவலக செய்தியாளரான நடராஜா குகராஜா என்ற ஊடகவியலாளர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
nadaraja kuharaja present crime investigation department Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites