தனித்து களத்தில் இறங்க தயாராகிறார் விக்கினேஷ்வரன்

0
696
north province chief minister vickneshwaran decide several party contest

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்து செல்வதற்கான செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. north province chief minister vickneshwaran decide several party contest

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் சி வி விக்கினேஷ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்ற அதேவேளை, விக்கினேஷ்வரனை முதலமைச்சராக தெரியு செய்து தவறிழைத்து விட்டதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும், சமந்திரன் அரசியல் இலாப நோக்கத்திற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்திற்கு முதலமைச்சராக நன்கு சட்டம் கற்றறிந்த ஒருவரை முதலமைச்சராக களமிறக்க தீர்மானம் மேற்கொண்டு சி வி விக்கினேஷ்வரனை தெரிவு செய்ததாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால் சி வி விக்கினேஷ்வரன் தனது சட்ட அனுபவத்தினை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தவில்லை எனவும் சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே முதலமைச்சர் அதிக தலையீட்டுடனான தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் முதலமைச்சருக்கும் இடையில் விரிசல்கள் அதிகரித்தன.

அத்துடன், வட மாகாணத்தின் ஆயட்காலமும் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே சி வி விக்கினேஷ்வரன் தனித்து இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
north province chief minister vickneshwaran decide several party contest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites